10th Standard Syllabus & Materials
10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Population, Transport, Communication and Trade Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Population, Transport, Communication and Trade Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Population, Transport, Communication and Trade Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Resources and Industries Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Resources and Industries Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Resources and Industries Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 19/10/2025
10ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test

1.
1 + 2 + 3+...+n = 666 எனில், n-யின் மதிப்பு காண்க.
2.
3 + k, 18 - k, 5k + 1 என்பவை ஒரு கூட்டுத் தொடர்வரிசையில் உள்ளன எனில், k-யின் மதிப்புக் காண்க.
3.
-11, -15, -19...., என்ற கூட்டுத் தொடர்வரிசையின் 19-வது உறுப்பைக் காண்க.
4.
ab x ba = 800 என்றவாறு அமையும் இரு மிகை முழுக்கள் ‘a’ மற்றும் ‘b’ ஐ காண்க.
5.
ஒற்றை முழுக்களின் வர்க்கமானது 4q + 1, (இங்கு q ஆனது முழுக்கள்) என்ற வடிவில் அமையும் எனக் காட்டுக.
6.
\(0.\bar { 123 } \) என்ற எண்ணின் விகிதமுறு வடிவம் காண்க.
7.
ரேகாவிடம் 10 செ.மீ, 11 செ.மீ, 12 செ.மீ ....., 24 செ.மீ என்ற பக்க அளவுள்ள 15 சதுர வடிவ வண்ணக் காகிதங்கள் உள்ளன. இந்த வண்ணக் காகிதங்களைக் கொண்டு எவ்வளவு பரப்பை அடைத்து அலங்கரிக்க முடியும்?
8.
5 + 55 + 555+... என்ற தொடர்வரிசையின் முதல் n உறுப்புகளின் கூடுதல் காண்க.
9.
ஒரு கூட்டுத் தொடர்வரிசையில் அமைந்த அடுத்தடுத்த மூன்று உறுப்புகளின் கூடுதல் 27 மற்றும் அவற்றின் பெருக்கற்பலன் 288 எனில், அந்த மூன்று உறுப்புகளைக் காண்க.
10.
S1, S2 மற்றும் S3 என்பன முறையே ஒரு கூட்டுத் தொடர்வரிசையின் முதல் n, 2n மற்றும் 3n உறுப்புகளின் கூடுதல் ஆகும். S3 = 3(S2 - S1) என நிறுவுக.
11.
கீழ்க்கண்ட தொடர்வரிசைகள் ஒவ்வொன்றிலும் n-வது உறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள உறுப்புகளைக் காண்க.
(i) an = \(\frac { 5n }{ n+2 } \); a6 மற்றும் a13
(ii) an =-(n2 - 4); a4 மற்றும் a11
12.
396, 504, 636 ஆகியவற்றின் மீ.பொ.வ காண்க.
13.
14.
74k ☰ _____ (மட்டு 100)
1
2
3
4
15.
65 மற்றும் 117-யின் மீ.பொ.வ -வை 65m - 117 என்ற வடிவில் எழுதும்போது, m -யின் மதிப்பு _____.
4
2
1
3
16.
யூக்ளிடின் வகுத்தல் துணைத் தேற்றத்தைப் பயன்படுத்தி, எந்த மிகை முழுவின் கனத்தையும் 9ஆல் வகுக்கும் போது கிடைக்கும் மீதிகள் ____.
0, 1, 8
1, 4, 8
0, 1, 3
1, 3, 5
17.
(13 + 23 + 33+ ...+ 153) - (1 + 2 + 3+....+15) யின் மதிப்பு _______.
14400
14200
14280
14520
18.
t1, t2, t3,..... என்பது ஒரு கூட்டுத் தொடர்வரிசை எனில் t6, t12, t18,.... என்பது _____.
ஒரு பெருக்குத் தொடர்வரிசை
ஒரு கூட்டுத் தொடர்வரிசை
ஒரு கூட்டுத் தொடர்வரிசையுமல்ல, பெருக்கு தொடர்வரிசையுமல்ல
ஒரு மாறிலித் தொடர் வரிசை
19.
ஒரு தொட்டியை நிரப்பத் தேவையான குழாய்களின் எண்ணிக்கையும் அவை எடுத்துக் கொள்ளும் நேரமும் பின்வரும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.
| குழாய்களின் எண்ணிக்கை (x) | 2 | 3 | 6 | 9 |
| எடுத்துக் கொள்ளும் நேரம் (y) நிமிடங்களில் | 45 | 30 | 15 | 10 |
மேற்காணும் தரவுகளுக்கு வரைபடம் வரைந்து,
(i) 5 குழாய்களை பயன்படுத்தினால், தொட்டி நிரம்ப எடுத்துக் கொள்ளப்பட்ட நேரத்தைக் காண்க.
(ii) 9 நிமிடங்களில் தொட்டி நிரம்பினால், பயன்படுத்தப்பட்ட குழாய்களின் எண்ணிக்கையைக் காண்க.
20.
1.
1 + 2 + 3+...+n = \(\frac { n(n+1) }{ 2 } \) என்பதால் \(\frac { n(n+1) }{ 2 } \) = 666
n2 + n - 1332 = 0 ⇒ (n + 37)(n - 36) = 0
எனவே n = -37 அல்லது n = 36
ஆனால் n ≠ -37 ( ஏனெனில் n ஓர் இயல் எண்). ஆகவே n = 36.
2.
3 + k, 18 - k, 5k + 1 என்பன கூட்டுத் தொடர் வரிசையில் உள்ளன
\(t_1=3 + k, t_2=18-k, t_3 = 5 k+1\)
∴ அடுத்தடுத்த இரு உறுப்புகளின் வித்தியாசம் சமமாகும்.
\(i.e., t_2-t_1 =t_3-t_2 \)
\((18-k)-(3+k) =(5 k+1)-(18-k) \)
\(18-k-3-k =5 k+1-18+k \)
\(15-2 k =6 k-17 \)
\(15+17 =6 k+2 k \)
\(32 =8 k \) \(\Rightarrow\) \(k =\frac{32}{8}=4\)
3.
-11, -15, -19,.... என்பது தரப்பட்ட கூட்டுத்தொடர் வரிசை
இங்கு முதல் உறுப்பு a = -11
பொது வித்தியாசம் \(\mathrm{d}=\mathrm{t}_2-\mathrm{t}_1=-15-(-11)\)
= -15 + 11 = -4
∴ n-ஆவது உறுப்பு \(\mathrm{t}_{\mathrm{n}} =\mathrm{a}+(\mathrm{n}-1) \mathrm{d} \)
∴ 19- ஆவது உறுப்பு \(\left(\mathrm{t}_{19}\right) =-11+(19-1)(-4) \)
= -11 +18(-4)
= -11 + (-72) = -83
∴ -11,-15,-19,......-இன் 19 ஆவது உறுப்பு - 83.
4.
800 என்ற எண்ணைக் காரணிப்படுத்தும்போது, நாம் பெறுவது
800 = 2 x 2 x 2 x 2 x 2 x 5 x 5 =25 x 52
ஆகவே, ab x ba = 25 x 52
இதிலிருந்து நாம் பெறுவது. a = 2, b = 5 (அ) a = 5, b = 2
5.
x என்பது ஓர் ஒற்றை முழுக்கள் என்க. எந்தவொரு ஒற்றை முழுக்களுக்கும் ஏதேனும் ஓர் இரட்டை முழுக்களை விட ஒன்று அதிகமாக இருக்கும் என்பதால், x = 2k + 1, இங்கு k என்பது ஏதேனும் ஒரு முழுக்கள்.
x2 = (2k + 1)2
= 4k2 + 4k + 1
= 4k(k + 1) + 1
= 4q + 1. இங்கு, q = k(k + 1) என்பது ஒரு முழுக்கள்.
6.
\(0 . \overline{123}=0.123123123 \ldots. \)
\(=0.123+0.000123+0.000000123+\ldots. \)
\(\frac{t_2}{t_1}=\frac{0.000123}{0.123}=\frac{0.123}{123}=0.001=\mathrm{r}\)
∴ இது ஒரு பெருக்குத் தொடர் வரிசை ஆகும்.
\(\mathrm{a}=0.123 \) மற்றும் r = 0.001
முடிவிலி வரை கூடுதல் \(=\frac{a}{1-r}\)
\(=\frac{0.123}{1-0.001}=\frac{0.123}{1-\frac{1}{1000}} \)
\(=\frac{0.123}{\frac{999}{1000}}=\frac{123}{999} \)
\(\therefore 0 . \overline{123}=\frac{41}{333}\)
7.
\(1^2+2^2+3^2+\ldots+n^2=\frac{n(n+1)(2 n+1)}{6}\)
வண்ணக் காகிதங்களால் அலங்கரிக்கும் பரப்பு \(=10^2+11^2+12^2+\ldots+24^2\)
=(12 + 22 + 32 + .... + 242) - (12+22 + .... + 92)
\(=\frac{24 \times(24+1)[2(24)+1]}{6}-\frac{9 \times(9+1)[2(9)+1]}{6} \)
\(=(4 \times 25 \times 49)-\frac{9 \times 10 \times 19}{6} \)
= 4900 - 285 = 4615
4615 செ.மீ2 பரப்பளவு அடைத்து அலங்கரிக்க இயலும்.
8.
5 + 55 + 555+.... என்பது ஒரு கூட்டுத் தொடர்வரிசையும் அல்ல, பெருக்குத் தொடர்வரிசையும் அல்ல. எனவே, இந்தத் தொடரை இரு தொடர்களாகப் பிரித்துக் கூடுதல் காண்போம்.
5 + 55 + 555+... n உறுப்புகள் வரை = 5[1 + 11 + 111+.... n உறுப்புகள் வரை]
= \(\frac { 5 }{ 9 } \)[9 + 99 + 999+...n உறுப்புகள் வரை]
=\(\frac { 5 }{ 9 } \)[(10-1) + (100-1) + (1000-1) + ... n உறுப்புகள் வரை]
= \(\frac { 5 }{ 9 } \)[(10 + 100 + 1000+... n உறுப்புகள் வரை) - n]
= \(\frac { 5 }{ 9 } \left[ \frac { 10(10^{ n }-1) }{ (10-1) } -n \right] =\frac { 50(10^{ n }-1) }{ 81 } -\frac { 5n }{ 9 } \)
9.
கூட்டுத் தொடர் வரிசையின் மூன்று அடுத்தடுத்த உறுப்புகள் \(\mathrm{a}-\mathrm{d}, \mathrm{a}, \mathrm{a}+\mathrm{d}\) என்க.
அவற்றின் கூடுதல் = 27
\((\mathrm{a}-\mathrm{d})+\mathrm{a}+(\mathrm{a}+\mathrm{d})=27\)
a - d + a + a + d = 27 \(\Rightarrow\) 3a = 27
\(a =\frac{27}{3}=9\)
பெருக்கற்பலன் = 288
\((a-d) a(a+d)=288 \)
\(a\left(a^2-d^2\right)=288 \)
\(9\left(9^2-d^2\right)=288 \)
\(81-\mathrm{d}^2=\frac{288}{9} \)=32
\( \mathrm{d}^2 =81-32=49 \)
d = ±7
a = 9 மற்றும் d = \( \pm\) 7
(i) a = 9, d = 7 எனில்,
மூன்று உறுப்புகள் 9 -7, 9, 9 + 7 i.e) 2, 9, 16
(ii) a = 9, d = -7 எனில்,
மூன்று உறுப்புகள் 9 - (-7) 9, 9 - 7 i.e) 16, 9, 2
10.
S1, S2 மற்றும் S3 என்பன முறையே ஒரு கூட்டுத் தொடர்வரிசையின் முதல் n, 2n மற்றும் 3n உறுப்புகளின் கூட்டல் எனில்,
\(S_1=\frac{n}{2}[2 a+(n-1) d], \ S_2=\frac{2 n}{2}[2 a+(2 n-1) d], S_3=\frac{3 n}{2}[2 a+(3 n-1) d]\)
தற்போது, S2 - S1 =\(\frac { 2n }{ 2 } \) [2a + (2n - 1)d] -\(\frac { n }{ 2 } \)[2a + (n - 1)d
=\(\frac { n }{ 2 } \)[4a + 2(2n - 1)d - [2a + (n - 1)d]]
S2 - S1 = \(\frac { n }{ 2 } \) x [2a + (3n - 1)d]
3(S2 - S1) = \(\frac { 3n }{ 2 } \)[2a + (3n - 1)d]
3(S2 - S1) = S3
11.
(i) \(a_n=\frac{5 n}{n+2} ; a_6\) மற்றும் a13
இங்கு \( \mathrm{a}_{\mathrm{n}}=\frac{5 n}{n+2}\)
n = 6 எனில்,
\(a_6=\frac{5 \times 6}{6+2}=\frac{30}{8}=\frac{15}{4}\)
n = 13 எனில்,
\(a_{13}=\frac{5 \times 13}{13+2}=\frac{65}{15}=\frac{13}{3}\)
\(\therefore \mathrm{a}_6=\frac{15}{4}\) மற்றும் \(\mathrm{a}_{13}=\frac{13}{3}\)
(ii) \(\mathrm{a}_{\mathrm{n}}=-\left(\mathrm{n}^2-4\right) ; \mathrm{a}_4\) மற்றும் a11
இங்கு \(a_n=-\left(n^2-4\right)\)
n = 4 எனில்
\(a_4=-\left(4^2-4\right)=-(16-4)=-12\)
n = 11 எனில்
\(\mathrm{a}_{11}=-\left(11^2-4\right)=-(121-4)=-117 \)
\(\therefore a_4=-12 ; \quad a_{11}=-117\)
12.
கொடுக்கப்பட்ட மூன்று எண்களின் மீ.பொ.வ காண, நாம் முதலில் முதல் இரு எண்களின் மீ.பொ.வ காண்போம்.
396 மற்றும் 504 ஆகியவற்றின் மீ.பொ.வ காண,
யூக்ளிடின் வகுத்தல் வழிமுறையைப் பயன்படுத்த நாம் பெறுவது 504 = 396 x 1 + 108
இங்கு மீதி 108 ≠ 0
மீண்டும் யூக்ளிடின் வகுத்தல் வழிமுறையைப் பயன்படுத்த 396 = 108 x 3 + 72
இங்கு மீதி 72 ≠ 0
மீண்டும் யூக்ளிடின் வகுத்தல் வழிமுறையைப் பயன்படுத்த நாம் பெறுவது 108 = 72 x 1 + 36
இங்கு மீதி 36 ≠ 0
மீண்டும் யூக்ளிடின் வகுத்தல் வழிமுறையைப் பயன்படுத்த நாம் பெறுவது 72 = 36 x 2 + 0
இங்கு மீதி = 0. எனவே 396 மற்றும் 504–யின் மீ.பொ.வ 36 ஆகும். 636 மற்றும் 36 –யின் மீ.பொ.வ காண, யூக்ளிடின் வகுத்தல் வழிமுறையைப் பயன்படுத்த நாம் பெறுவது 636 = 36 x 17 + 24
இங்கு மீதி 24 ≠ 0
மீண்டும் யூக்ளிடின் வகுத்தல் வழிமுறையைப் பயன்படுத்த நாம் பெறுவது 36 = 24 x 1 + 12
இங்கு மீதி 12 ≠ 0
மீண்டும் யூக்ளிடின் வகுத்தல் வழிமுறையைப் பயன்படுத்த நாம் பெறுவது 24 = 12 x 2 + 0
இங்கு மீதி = 0. எனவே, 636 மற்றும் 36 –யின் மீ.பொ.வ = 12
எனவே 396, 504 மற்றும் 636 –யின் மீப்பெரு பொது வகுத்தி 12 ஆகும்.
13.
(a)
14.
(a)
1
15.
65 மற்றும் 117 இன் மீ.பொ.வ = 13
\(65 \mathrm{~m}-117=13 \)
\(65 \mathrm{~m}=13+117=130 \)
\(\mathrm{~m}=\frac{130}{65}=2\)
16.
(a)
0, 1, 8
17.
\(\left(1^3+2^3+3^3+\ldots+15^3\right)-(1+2+3+\ldots+15) \)
\(=\left[\frac{n(n+1)}{2}\right]^2-\left[\frac{n(n+1)}{2}\right] \)
\(=\left[\frac{15 \times 16}{2}\right]^2-\left[\frac{15 \times 16}{2}\right]=(120)^2-120\)
= 14400 - 120 = 14280
18.
\(\mathrm{t}_1, \mathrm{t}_2, \mathrm{t}_3, \ldots\) என்பது கூட்டுத் தொடர்வரிசை எனில் \(t_6, t_{12}, t_{18}, \ldots . . .\) என்பதும் பொது வேறுபாடு 6d உடைய ஒரு கூட்டுத் தொடர்வரிசை ஆகும்.
19.
x அதிகரிக்கும் போது y குறைகிறது என கொடுக்கப்பட்ட அட்டவணையிலிருந்து தெளிவாக காண முடிகிறது. ஆகவே இது எதிர் மாறுபடும் ஆகும்.
இது \(y=\frac{k}{x}\) என்ற வடிவில் இருக்கும்
விகிதசம மாறிலி \(k=x y=2 \times 45=3 \times 30=6 \times 15=9 \times 10=90\)
(2, 45), (3, 30), (6, 15), (9, 10) ஆகியவற்றை வரைபடத்தில் குறித்து புள்ளிகளை நேர்கோடற்ற இழைவான வளைவரையாக வரையவும் செவ்வக அதிபரவளையம்
(i) வரைபடத்திலிருந்து 5 குழாய்களை பயன்படுத்தினால் தொட்டி நிரம்ப எடுத்துக் கொள்ளப்பட்ட நேரம் 18 நிமிடங்கள் ஆகும்
(ii) வரைபடத்திலிருந்து 9 நிமிடங்களில் தொட்டி நிரம்பினால் பயன்படுத்தப்பட்ட குழாய்களின் எண்ணிக்கை 10.
20.
10th Standard Syllabus & Materials
10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - Climate and Natural Vegetation of India Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - Climate and Natural Vegetation of India Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - Climate and Natural Vegetation of India Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Location, Relief and Drainage Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards